Connect with us
Cinemapettai

Cinemapettai

Reviews | விமர்சனங்கள்

பொய் vs கோவம்! ஜெயித்தது யார்? சவரக்கத்தி திரை விமர்சனம்

சில பல நாட்களாகவே நம் கோடம்பாக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் இந்த சவரகத்தி. மசாலா படங்கள் எடுத்து எளிதாக பணம் சம்பாதிக்கும் வழி இருந்தும், அவ்வாறு செய்யாமல் தங்களுக்கு மன நிறைவு தரும் படங்களை எடுக்கும் இரண்டு இயக்குனர்கள் ராம் மற்றும் மிஷ்கின். இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள படம்.

ராமின் படங்களில் ஹீரோவின் கதாபாத்திர அமைப்பு யதார்த்தமாக இருக்கும். மிஷ்கின் அவர்களின் படத்தில் வில்லன கதாபாத்திரம் ஹீரோவை விட விலாவரியாக காட்டப்பட்டிருக்கும். எனவே ஹீரோவாக ராம், வில்லனாக மிஷ்கின். இவர்களில் இருவரில் நடிப்பில் ஜெயித்தது யார் என்று பின்னர் அலசுவோம் …

சவரக்கத்தி

கதை, திரைக்கதை மிஷ்கின் அவர்களுடையது. அவரின் தம்பி ஆதித்யா தான் இயக்குனர். அப்பாவி, துள்ளிக்குதித்த எலியை வேட்டையாடும் பூனை. இல்ல இல்ல எலியை வேட்டையாடும் மதம் கொண்ட யானை என்று தான் படத்தின் கதையை ஒரு வரியில் சொல்ல முடியும்.

படம் ப்ரோமஷன் அனைத்திலும் மிஷ்கின் பெயர் தான் பார்க்க முடிந்தது. எனவே சாமானியனை பொறுத்தவரை இது மிஷ்கின் படம் என்ற எதிர்பார்ப்புடன் தான் திறற்க்கு வந்து அமர்கிறான். அவன் எதிர்பார்ப்பை துளியும் குறை இல்லாமல் பூர்த்தி செய்துவிட்டனர் இந்தப்படக்குழு.

மிஷ்கின் “மங்கா” என்ற கேரக்டரில் கோவத்தைக் கட்டிப்பிடித்து வாழ்கின்ற ரவடி கதாபாத்திரம். எப்பொழுதும் பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் அடித்து, உதைக்கும் கதாப்பாத்திரம்.

ராம் “பிச்சை” என்ற பார்பர் கேரக்டரில் நடித்துள்ளார். பொய்யே கட்டிப்பிடித்து கொண்டு வாழ்கின்ற ஒரு கதாபாத்திரம். ரீல் சுத்துவதில் மன்னர்.

“சுமத்ரா” என்ற கேரக்டரில் பூர்ணா. ராமின் மனைவியாக காது கேட்காத, 2 கைக்குழந்தைகளுடன் 9 மாத கர்ப்பிணிப் பெண்ணாக நடித்துள்ளார்.

கதை

தன் மச்சானின் திருமணத்திற்காக குடும்பத்துடன் ராஜதூட் வண்டியில் செல்லும் ராம் சிறு தகராறில் மிஷ்கின் அன்ட் கோஷ்டியிடம் தகராறு வளர்த்து விடுகிறார். அவரை கொலை செய்ய தேடு ரவுடி கும்பல். எதிராகவும் திராணி இல்லாமல், சமாதான பேச்சும் கை கொடுக்காமல், ஓடிக்கொண்டே இருக்கும் ராம்.

பூர்ணாவின் தம்பி அவர் காதலித்த பெண், ரெஜிஸ்டர் ஆபீஸ், துரத்தும் பெண் வீட்டார் என்று செல்கிறது கதை. இறுதியில் அணைத்து கதாபாத்திரகளும் ஒரே இடத்தில் சங்கமிக்க ஆரம்பம் ஆகிறது கிளைமாக்ஸ் .

பிளஸ்

பூர்ணா, கதாபாத்திர அமைப்பு, அராலி கொரெல்லி பின்னணி இசை, கார்த்திக் வெங்கடராமன் ஒளிப்பதிவு

மைனஸ்

அதிக பீப் வார்த்தைகள், வன்முறை கொஞ்சம் ஓவர்

சினிமாபேட்டை கருத்து

ஒரு குறிப்பிட்ட ஜானரில் இப்படத்தை அடக்கிவிட முடியாது. ரோடு சேசிங் வைத்து தமிழில் அதிகமாக படங்கள் வந்ததில்லை. அதுவும் நம் நார்த் மெட்ராஸ் பகுதிகளை மட்டும் வைத்து எடுத்துள்ள இந்த டீமை பாராட்டியே ஆக வேண்டும். சில இடங்களில் அடுத்து நடக்க இருப்பதாய் நம்மால் யூகிக்க முடிந்தாலும், விறுவிறுப்பு குறையவில்லை என்பது தான் உண்மை.

நம்மை சிரிக்கவும் வைக்கிறார்கள், இறுதியில் சிந்திக்கவும் வைத்துவிடுகிறார்கள். எனினும் குழைந்தைகளுடன் சென்று பார்க்க முடியுமா என்றால், சற்றே தயங்காதோன்றிகிறது .(வன்முறையை சிறிது குறைத்திருக்கலாம்.)

இது போன்ற கான்செப்ட் படங்கள் வருவதால் தான் தமிழ் சினிமாவும் உலக தரத்தை நோக்கி செல்கிறது என்று நம்மாலும் மார் தட்ட முடிகின்றது.

நடிகர்களாக ராம் – மிஷ்கின் இருவரும் தன் பணியை சிறப்பாக செய்தாலும் , படம் முடியும் பொழுது நம் மனதில் நிற்பது பூர்ணாவின் நடிப்பு மட்டும் தான். அவருக்கு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சிரியம் இல்லை. அசத்தியுள்ளார் .

சினிமாபேட்டை ரேட்டிங் 3.25 / 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top