மிஷ்கின் தனது “லோன் வுல்ஃப் புரொடக்ஷன்” சார்பாக கதை,திரைகதை எழுதி, நடித்து தயாரித்திருக்கும் படம் தான் “சவரக்கத்தி” . இயக்குனர் ராம் நாயகனாக, நாயகியாக பூர்ணா. வில்லனாக மிஷ்கின். அவரின் தம்பி ஜி. ஆர் . ஆதித்யா படத்தின் இயக்குனர்.

savarakathi

நாளை இந்த படம் ரிலீஸ் ஆகிறது இந்த படத்தில் பார்பர் வேடத்தில் நடித்திருக்கும் ராம் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.அவர் கூறியதாவது நான் தங்கமீன்கள் நடித்து முடித்ததும் இயக்குனர் ஆதித்யா இந்த படத்தில் நடிக்க அணுகினார். அதேபோல் இப்படத்தில் காமெடி அதிகமாக இருக்கும்.

savarakaththi

மேலும் ராம் எனக்கும் காமெடிக்கும் ரொம்ப தொலைவு இருந்தாலும் இப்படத்தில் “பார்பர்” கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் நன்றாக இருக்கும். அதனால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

savarakaththi

அதேபோல் இந்த படத்தில் ஹீரோ , வில்லன் என்று என்பது இல்லை. இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்க்கலாம். இப்படத்தில் இசையமைப்பாளர் அருள் கொரலி மிகவும் சிறப்பாக இசையமைத்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது.