26 வயது மகனை காப்பாற்ற முடியாமல் போன மைக்ரோசாப்ட் சிஇஓ.. அதிர்ச்சியை கிளப்பிய காரணம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாடெல்லா. அவரது மனைவி அனு நாடெல்லா. இவர்களுக்கு ஜைன் நாடெல்லா என்ற மகனும், இரு மகள்களும் உள்ளனர். ஜைன் அவர்களுக்கு 26 வயது ஆகிறது. இவர் பிறக்கும் போதே பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நோய் உள்ள சிலருக்கு ஆயுள் மிகக் குறைவாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிற்கவோ, நடக்கவோ முடியாது. ஜைன் இதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இறந்தவர் குடும்பத்திற்கு மனதைரியத்தை அளிக்குமாறு பிரார்த்தனை செய்யவும் அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் தனிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் என மெயில் அனுப்பப்பட்டுள்ளது.

தலைமை செயல் அதிகாரியாக 2014 இல் பதவியேற்றதில் இருந்து சத்யா நாதெல்லா குறைபாடு கொண்ட பயனர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் சாதனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

தன் மகன் ஜைன் வளர்ப்பதில் பெற்ற அனுபவங்களை வைத்து இதை உருவாக்குவதாக தெரிவித்தார். இந்நிலையில் மைக்ரோசாஃப்டின் சிஇஓ ஆக இருக்கும் சத்யா நாடெல்லா மகன் ஜைனின் மரணம் மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

microsoft-ceo-son
microsoft-ceo-son