செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

ரோகினிக்கு சிட்டி கொடுக்கும் டார்ச்சரை தெரிந்து கொள்ளும் சத்தியா.. முதல் முறையாக முத்துக்கு வரும் சந்தேகம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ரோகிணி பற்றிய ரகசியங்கள் எப்பொழுது குடும்பத்திற்கு தெரிய வரும் என்றுதான். ஆனால் அதைத் தவிர முத்து மற்றும் மீனாவிற்கு தொடர்ந்து பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் கடுப்பான மக்கள் இந்த நாடகத்தை கொஞ்சம் கொஞ்சமாக பார்ப்பதை குறைத்துக் கொண்டு வருகிறார்கள்.

இதனால் டிஆர்பி ரேட்டிங்கிலும் அடிவாங்கி விட்டது. அதனால் அதிரடியான முடிவாக கொஞ்சம் கொஞ்சமாக ரோகிணி பற்றிய ரகசியங்கள் வெளிவரப் போகிறது. முதலில் PAக்கு மட்டும் தெரிந்த விஷயம் இப்பொழுது சிட்டிக்கும் தெரிந்து விட்டது. அதனால் சிட்டி இந்த விஷயத்தை வைத்து ரோகினிடம் இருந்து பணம் பறிக்கலாம் என்று முதலில் வைத்த செக் 2 லட்சம் ரூபாய்.

அதை எப்படியோ கொடுப்பதற்கு ரோகினி அங்கே இங்கே என்று திருடி கொடுத்து சமாளித்து விட்டார். ஆனால் மறுபடியும் சிட்டி, ரோகிணிக்கு டார்ச்சர் கொடுக்கப் போகிறார். அந்த வகையில் ரோகினிடம் பணம் கேட்டு தொந்தரவு பண்ணப் போகிறார். இந்த விஷயம் சிட்டியின் நண்பர் மூலம் சத்யாவுக்கு தெரிய வர வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் என்ன பிரச்சனை எதற்காக என்று தெரியாத சத்தியா, சிட்டியின் மிரட்டலுக்காக பயந்து ரோகிணி பணம் கொடுக்கிறார் என்பது மட்டும் தெரியப்போகிறது. இந்த விஷயத்தை மாமாவிடம் சொல்லலாம் என்று முத்துவுக்கு தெரியப்படுத்த போகிறார். ஏற்கனவே முத்துவுக்கு சின்ன சின்ன சந்தேகம் ரோகினி மேல் வந்து கொண்டே இருக்கிறது. ஏனென்றால் ரோகிணி பார்லரில் வேலை தான் செய்கிறார். ஓனர் கிடையாது என்பது முத்துக்கும் அண்ணாமலைக்கும் தெரியும்.

அதே மாதிரி இப்பொழுது வரை ரோகிணியின் அப்பாவை காட்டாமல் இருப்பது எதற்காக என்றும் அவ்வப்போது முத்து சந்தேகப்பட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ரோகிணியை சிட்டி மிரட்டுவதற்கான காரணம் என்ன என்று கண்டுபிடிக்க போகிறார். இன்னும் ஒரு சில நாட்களில் ரோகிணி பற்றிய விஷயங்கள் முத்துவுக்கு தெரிய வரப்போகிறது.

இதற்கு இடையில் பார்வதி வீட்டில் இருந்து எடுத்த பணத்தையும் கமுக்கமாக வைத்து அதற்கு ஒரு ட்ராமாவை போட்டு பணம் கிடைத்துவிட்டது என்று விஜயா மற்றும் குடும்பத்தையும் நம்ப வைத்து விட்டார். அத்துடன் விஜயா கேட்டுக்கொண்டபடி மனோஜ் 3 லட்ச ரூபாய் பணத்தை ஏற்பாடு பண்ணி முத்துவிடம் கொடுத்துவிட்டார். இதன் மூலம் முத்து கடனை அடைத்து விட்டு மீனா அவருடைய பிசினஸை பெரிதுபடுத்தி அதன் மூலம் லாபத்தை சம்பாதிக்க முயற்சி எடுக்கப் போகிறார்.

- Advertisement -

Trending News