கொட்டுக்காளியை விமர்சிக்க என்ன தகுதி இருக்கு.? சாட்டையால் அமீரை வெளுத்து விட்ட துரைமுருகன்

Kottukkaali Controversy: கடந்த வாரம் மாரி செல்வராஜின் வாழை சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடித்த கொட்டுக்காளி ஆகிய படங்கள் வெளிவந்தது. இதில் வாழை படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. அதே போல் சூரிக்கும் பாராட்டுக்கள் வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் கொட்டுக்காளி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்ற கருத்துக்களும் ஒரு பக்கம் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இயக்குனர் அமீர் ஒரு விழா மேடையில் இப்படத்தை கடுமையாகவே விமர்சித்து இருந்தார்.

விருது படத்தை எதற்காக தியேட்டருக்கு கொண்டுவர வேண்டும். இது ஒரு வித வன்முறை தான் என சிவகார்த்திகேயனை காட்டமாக விமர்சித்து பேசியிருந்தார். இதற்கு தற்போது சாட்டை துரைமுருகன் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.

அமீரை விமர்சித்த சாட்டை துரைமுருகன்

கொட்டுக்காளி படம் வன்முறை என்றால் ஜெயம் ரவியை வைத்து நீங்கள் எடுத்த ஆதி பகவன் எந்த மாதிரியான படம். தமிழ் சினிமாவில் வெளிவந்த மிகவும் மோசமான படம் என அது எல்லா பத்திரிகைகளாலும் விமர்சிக்கப்பட்டது.

ஜெயம் ரவியின் திரை வாழ்வில் ஒரு கரும்புள்ளியாய் அந்த படம் இருக்கிறது. அதேபோல் அமீர் நடித்த யோகி கடும் விமர்சனங்களை பெற்றது. அது ரசிகர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை இல்லையா. சமீபத்தில் வெளிவந்த உயிர் தமிழுக்கு படமும் அப்படித்தான்.

ஆறு வருடங்களாக இழுத்தடிக்கப்பட்ட அந்த படத்தை 3 தயாரிப்பாளர்கள் 3 இயக்குனர்கள் எடுத்தார்கள். இது எந்த மாதிரியான முறை என அமீரை அவர் வெளுத்து வாங்கி இருக்கிறார். மேலும் கொட்டுக்காளி படத்தில் ஹீரோயின் வேறு சமூகத்தைச் சார்ந்த ஒருவரை காதலிக்கிறார்.

ஆனால் அவருக்கு பேய் பிடித்து விட்டது என பேயோட்ட செல்லும் குடும்பத்தினர் எந்த மாதிரியான பிற்போக்கு தன்மை கொண்டவர்கள். அதைத்தான் இயக்குனர் கலை படமாக எடுத்துள்ளார் என அமீரின் விமர்சனத்திற்கு தன் சாட்டையால் பதிலடி கொடுத்துள்ளார் துரைமுருகன்.

அமீரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய சாட்டை

Next Story

- Advertisement -