பிச்சைக்காரன் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் செம்ம வசூல் வேட்டை நடத்தியது. இரண்டு மொழிகள் சேர்த்து கிட்டத்தட்ட ரூ 30 கோடிகளுக்கு மேல் இந்த படம் வசூல் செய்து விட்டது.

இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தவர் சாட்னா டைட்டஸ், இவர் இப்படத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

ஆனால், சாட்னா ஒரு மாதத்திற்கு முன்பே ரகசிய திருமணம் செய்து விட்டாராம், மாப்பிள்ளை வேறு யாரும் இல்லை.

பிச்சைக்காரன் படத்தை தமிழகத்தில் வெளியிட்ட கே.ஆர்.பிலிம்ஸின் பங்குதாரர் கார்த்திக் என்பவர் தானாம்.

இருவீட்டார் சம்மதத்தோடு விரைவில் திருமணம் நடைப்பெறும், திருமணத்திற்கு பிறகு சாட்னா படங்களில் நடிக்கவும் மாட்டாராம்.