விகடன் விருது வழங்கும் நிகழ்ச்சி  கடந்த சனிக்கிழமை பிரமாண்டமாய் சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில்  நடைபெற்றது. இளையராஜா, கமல்ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான், விஜய் சேதுபதி,  விஜய், நயன்தாரா, இயக்குனர் ராம்  உள்ளிட்ட பல  பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

சத்யராஜ்

இந்நிகழ்ச்சியில் சிறந்த குணச்சித்திர நடிகர் விருது பாகுபலி 2 படத்துக்காக்க சத்தியராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. விகடன் குழுமம் இவருக்கு வழங்கும் நான்காவது விருது இது.

Sathyaraj -Bahubali2
Sathyaraj -Bahubali2 
கௌசல்யா ஷங்கர்
kousalya shankar

இவர் ஒன்றும் நாம் அறியாத நபர் கிடையாது. சாதி விட்டு சாதி திருமணம் செய்துகொண்ட சங்கா் மற்றும் கெள்சல்யா தம்பதியினா் மீது கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சங்கா் உயிாிழந்தாா். இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அந்த தீா்ப்பில் 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, உறவினா் பாண்டிதுரை, பிரசன்னா ஆகிய 3 போ் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனா்.

தற்பொழுது இது போன்ற ஆவண படுகொலைகளுக்கு எதிராக  போராடி வருகிறார்.

மேடையில் அந்த விருதை அவருக்கு கௌசல்யா ஷங்கர் வழங்கினார், மேலும் மே 17 இயக்கத்தை துவக்கிய திருமுருகன் காந்தி உடன் இருந்தார்.

satyaraj – vikatan awards

அப்பொழுது பேசிய சத்யராஜ் ” ஒருங்கிணைப்பாளர்கள் இந்த விருது எனக்கு தான் என்று சொல்லினர். மேலும் பல சீனியர் நடிகர்கள் பெயரை சொல்லி, இவர்களில் யாரிடம் இருந்து விருது பெற விரும்புகிறீர்கள் என்று கேட்டனர். நான் தான் கௌசல்யாவிடம் இருந்து பெற விரும்பினேன். தன் சொந்த துயரத்தை மறந்து உன்னத நோக்கத்துடன் போராடுபவர் அவர். நாங்கள் நடிகர் சமூக கொடுமைகளுக்கு எதிராக திரையில் தான் போராடுவோம். இவர்கள் தான்  நிஜ வாழ்க்கையில் களத்தில் இறங்கி போராடுபவர்கள்.” என்று மனம் நெகிழ பேசினார்.

sathyaraj_cinemapettaiவிரைவில் இந்நிகழ்ச்சி குறித்த விரிவான கட்டுரை  ஆனந்த விகடன் இதழில் வெளியாகும். மேலும் இந்நிகழ்ச்சி  சன் டிவியிலும் ஒளிபரப்பாக இருக்கிறது.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

சத்யராஜ் என்ற உன்னத மனிதனை சினிமாபேட்டை தலை வணங்குகிறது.