அப்போது நடிகர் சத்யராஜ் பேசியதற்கு இப்போது பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவர் கேட்க மறுத்தால் கர்நாடகாவில் பாகுபலி படம் வெளியிட முடியாது, என முன்னதாக கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தனது பேச்சு கன்னட மக்களை பாதித்து இருந்தால்  அதற்கு வருந்துவதாக சத்யராஜ் கூறியுள்ளார். இந்நிலையில் கர்நாடகாவில் தொடர்ந்து பல இடங்களில் சத்யராஜ் உருவ பொம்மையை கன்னட அமைப்பினர் தீ வைத்து கொளுத்தினர்.

அதிகம் படித்தவை:  வசூலில் சாதனை படைத்த ஜாக்சன் துரை - இத்தனை கோடி வசூலா?

மேலும் வாட்டாள் நாகராஜ் இன்று பேசுகையில், சத்யராஜ் உட்காந்து சொல்லுவதை நாங்கள் ஏற்க முடியாது, நேரில் வந்து சத்யராஜ் எங்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், தவறும் பட்சத்தில் நாங்கள் அறிவித்தப்படி படம் வெளியாகும் ஏப்ரல் 28ம் தேதி கர்நாடகாவில் ‘பந்த்’ நடைபெறும் என தெரிவித்துள்ளார்.