Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவின் அமீர்கான் யார் தெரியுமா? சத்யராஜ் விசில் பறக்கும் பேச்சி

தமிழ் சினிமாவின் அமீர்கான்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் இளம் நடிகர்களை புகழ்வதும் அவர்களின் பெருமைகளை சொல்வதும் இளம் நடிகைகளுக்கு ஒரு உத்வேகத்தை உருவாக்கும். அதனை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்து வரும் படங்களில் தனது திறமையை நிரூபித்து மேலும் பெயர், புகழ் வாங்க வேண்டும்.
தற்பொழுது கனா படத்தின் சக்சஸ் விழா நடத்தினார்கள். அதில் பங்கேற்ற பிரபல நட்சத்திரங்கள், கனா படத்தில் நடித்த கலைஞர்கள், படத்தினை பற்றி நிறைய புகழ்ந்து பேசினார்கள். அப்போது பேசிய சத்யராஜ் தனது கடந்த கால நிகழ்வுகளையும் ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றியும் பெருமையாக கூறினார்.
இப்படிப்பட்ட படங்களை தேர்வு செய்து தயாரிப்பதற்கு ஒரு தைரியம் வர வேண்டும் அதே நேரத்தில் அவை லாபகரமானதாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம். சமுதாயத்துக்கு தேவையான படங்களை அப்பப்ப எடுக்க வேண்டும் என்பது சத்யராஜின் வேண்டுகோள்.
கனா படத்தை தயாரித்த சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ஒரு அமீர்கான் என்று புகழ்ந்தார். அமீர்கான் எப்படி இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பல படங்களை எடுத்து உள்ளாரோ அதேபோல் சிவகார்த்திகேயனும் நல்ல படங்களை தேர்வு செய்து தயாரிக்கிறார் என்று கூறினார்.
