சத்யராஜ், சசிகுமார் அதிரடியில் எம்ஜிஆர் மகன் விமர்சனம்.. ஒரு வாட்டியாவது பார்க்கலாமா.?

வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பொன்ராம் இயக்கத்தில் நேரடியாக OTT தளத்தில் வெளியாகியுள்ள படம் எம்ஜிஆர் மகன். அந்தோணிதாசன் இந்த படத்திற்க்கு இசையமைத்துள்ளார்.

கதை சசிகுமாருக்கு அப்பாவாக சத்யராஜ், அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், மாமாவாக சமுத்திரக்கனி. அப்பா – மகன் இருவரும் பேசுவது கிடையாது. (அதற்கு ரொம்ப சுமாரான பிளாஷ் பேக்கும் உண்டு) நாட்டு வைத்தியரான சத்யராஜிடம் மருத்தவம் பார்க்க தனது அப்பாவை அழைத்து சென்னையில் இருந்து தேனி வருகிறார் மிர்னாலினி ரவி.

செய்தித்தாளில் பெயர் முதல் பக்கத்தில் வரவேண்டும் என்பதே நாயகனின் நோக்கம். ஜாலியாக ஊர் சுற்றுவது, நட்புக்காக ஊர் பிரெஸ்டன்ட் பதவி, டூயட்  என சசிகுமார் கதாபாத்திரம். மருத்துவம் பார்த்துக்கொண்டே, ஊர் மலை கல் குவாரி ஆகக்கூடாது என கேஸ் நடத்தும் சத்யராஜ்.

mgr-magan
mgr-magan

முரட்டு சிங்கிள் சமுத்திரக்கனி கல்யாணம் என சிறுது நேரம் கழிய, கிளைமாக்சில் கோர்ட் தீர்ப்பு கல் குவாரிக்கு அனுமதி அளிக்கிறது. அப்பாவின் கனவை நிறைவேற்ற, மக்களை ஒன்று திரட்ட பிளான் போடுகிறார் சசிகுமார். அவர் திட்டம் நிறைவேறியதா, பேப்பரில் அவர் பெயர் வந்ததா என்பது மீதி கதை.

சினிமாபேட்டை அலசல்– இயக்குனர் பொன்ராமின் அதே டெம்ப்லேட்  இப்படம். எனினும் முந்தையை படங்களை போல இதில் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை. சீனியர் நடிகர்கள் சத்யராஜ், சசிகுமார், சமுத்திரக்கனி போன்றவர்களை வைத்து இப்படத்தை சொதப்பியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

சமுத்திரக்கனி கல்யாண கலாட்டா, சசிகுமார் காதல், வில்லன் க்ரூப் என 10 வருடம் பின் தங்கியுள்ளது திரைக்கதை. இறுதியில் மருந்து கம்பெனி அரசியல் கொண்டு வருவதெல்லாம் டூ மச்.  ரொம்பவே சுமாரான படம்.

சினிமாபேட்டை ரேட்டிங்  2 / 5