தமிழ் நாட்டில் நடந்து வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் திரை பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய கருத்தை முன் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம், அரசியல் சூழல், என அனைத்து நிகழ்வுகளிலும் அக்கறை காட்டி வருகின்றனர் .

தற்போது நடிகர் சத்யராஜ், இது வரை எந்த ஒரு நடிகரும் முன் வைக்காத ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

அது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி ராஜீவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இவருடைய கோரிக்கை ஏற்கப்படுமா… இவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா..? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .