fbpx
Connect with us

Cinemapettai

அஜித்துக்காக எழுதிய கதையில் சத்யராஜ் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம்.. புரட்சித் தமிழனுக்கு வந்த வாழ்வு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்துக்காக எழுதிய கதையில் சத்யராஜ் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம்.. புரட்சித் தமிழனுக்கு வந்த வாழ்வு

தமிழ் சினிமாவில் தல அஜித்துக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் அஜித் படங்கள் எல்லாமே பெரிய அளவு வெற்றியை பெற்று வருகின்றன.

ஆனால் ஒரு சில கால கட்டங்களுக்கு முன் அதிக தோல்வி படங்களை கொடுத்த நடிகராகவும் வலம் வந்தார். இருந்தாலும் மீண்டு வந்து விடுவேன் என்ற நம்பிக்கையில் தற்போது முக்கியமான இடத்தை பிடித்துள்ளார்.

ஆனால் அஜீத்துக்காக எழுதிய ஒரு கதையில் புரட்சி தமிழன் சத்யராஜ் நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த படத்தின் ரகசியத்தை அந்தப் படத்தின் இயக்குனர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

சத்யராஜ், தேவயானி, வடிவேலு நடிப்பில் உருவாகி 2000 ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் என்னம்மா கண்ணு. தேவா இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்.

இந்த படத்தை எழுதி இயக்கியவர் சக்தி சிதம்பரம். ஆனால் முதன்முதலாக எண்ணமா கண்ணு படத்தை தல அஜித்தை வைத்து மன்மதன் என்ற தலைப்பில் உருவாக்கியிருந்தாராம்.

ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்தப் படத்தை அஜித்துடன் பண்ண முடிய வில்லையாம். அதுவரை பெரிய அளவு வெற்றி படம் கொடுக்காத சத்யராஜுக்கு அந்த படம் மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

அதன் பிறகு சில வருடங்களுக்கு சத்யராஜ் ஒரு ரவுண்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top