fbpx
Connect with us

ஜப்பான் ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்த சத்யராஜ்… ஏன் தெரியுமா?

Sathyaraj-Karnataka-Baahubali2

News / செய்திகள்

ஜப்பான் ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்த சத்யராஜ்… ஏன் தெரியுமா?

பாகுபலி படத்தில் சத்யராஜ் நடித்த கட்டப்பா வேடத்தால் ஜப்பான் ரசிகர்களின் செம ஹிட் அடித்திருப்பதாக தெரிகிறது.

sathiyaraj

sathiyaraj

தெலுங்கு உலகின் பிரம்மாண்ட படைப்பாக வெளியாகிய படம் பாகுபலி. இப்படத்தை ராஜமௌலி இயக்கி இருந்தார். பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தை ஏற்று இருந்தனர். படம் இரண்டு பாகங்களாக வெளியாகியது. முதல் பாகத்தில் பாகுபலியை கொன்றேன் என கட்டப்பா கூறியதும் படம் முடிந்து விடும். ரசிகர்களுக்கு அதன் காரணத்தை தெரிந்து கொள்ளாமல் மண்டையே வெடித்தது. இதை தொடர்ந்து, பாகுபலி இரண்டாம் பாகம் வெளியாகியது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு காணப்பட்டது. இப்படம் வெளியாகி, முதல் பத்து நாட்களுக்குள் உலக அளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்தது.

படம் பெருவாரியான இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் அந்நிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியது. அந்த வகையில் இப்படம் சீனா, ஜப்பானிலும் தணிக்கை செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இரண்டாம் பாகம் டிசம்பர் 29 ஆம் தேதி ஜப்பானில் திரையிடப்பட்டு, பெரும் வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து, சமீபத்தில் சீனாவில் திரையிடப்பட்டது. தற்போதைய கணக்கு வரை 100 மில்லியன் சீனாவில் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், படத்திற்கு பெருவாரியான அட்வான்ஸ் புக்கிங்களும் நடைபெற்று வருகிறதாம். இதற்கு காரணம், கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் என்ற புதிய தகவல்கள் தான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. சத்யராஜின் பாகுபலி உடைகளும், வாளும் சீன கடைகளில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புரட்சி தமிழனுக்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்ததில் தமிழ் சினிமா உலகமே மகிழ்ச்சியில் இருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top