கட்டப்பாவுக்கு லோகேஷ் கொடுத்த கேரக்டர்.. ரஜினிக்கு வில்லன் எல்லாம் ஓல்டு ஸ்டைல்

Rajini : ரஜினி, லோகேஷ் கூட்டணியில் உருவாகிறது கூலி படம். இந்த படத்தில் நடிக்கும் பிரபலங்கள் மற்றும் அவர்களின் கேரக்டர்களை கடந்த சில நாட்களாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வந்தது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அதேபோல் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா சைமனாக நடிக்கும் நிலையில் ஸ்ருதிஹாசன் ப்ரீத்தி ஆகவும், சவுபின் ஷாஹிர் தயாவாகவும் மற்றும் சத்யராஜ் ராஜசேகர் ஆகவும் நடித்துள்ளார் என்பதை போஸ்டர் மூலம் படக்குழு தெரியப்படுத்தி இருந்தது.

கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்த சத்யராஜ் என்ற படத்தில் நடிக்கிறார். அதுவும் அந்த காலத்தில் இருந்தது போல ஒரு கொடூர வில்லனாக லோகேஷ் சத்யராஜை காட்டுவார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அதெல்லாம் ஓல்ட் ஸ்டைல் இப்ப சத்யராஜ்னு கேரக்டரே வேற என்று அவரது மகள் திவ்யா சத்யராஜ் சமீபத்தில் கூறியிருக்கிறார்.

ரஜினிக்கு வில்லனாக கூலி படத்தில் சத்யராஜ் நடிக்கவில்லை

அதாவது கூலி படத்தின் முழு கதையும் தனக்கு தெரியும் என்று கூறிய திவ்யா இப்போது அதை வெளியில் என்னால் சொல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. ஆனால் கண்டிப்பாக இந்த படத்தில் தனது தந்தை வில்லனாக நடிக்கவில்லை என்பதை மட்டும் சொல்கிறேன் என்று சஸ்பென்சை உடைத்திருந்தார்.

வில்லன் தோரணையில் எல்லோரையும் கதி கலங்க செய்திருந்த சத்யராஜ் பாகுபலி படத்தில் கட்டப்பாவாக பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். அதேபோல் கூலி படத்திலும் ரஜினியின் தோழன் அல்லது உறவினர் கதாபாத்திரத்தில் ஒரு நேர்மையான கேரக்டரில் தான் சத்யராஜ் வர இருக்கிறார்.

மேலும் பல வருடங்களுக்குப் பிறகு சத்யராஜ் மற்றும் ரஜினியை ஒரே திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். அதோடு கூலி படத்தில் சத்யராஜின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

கூலி படத்தில் சம்பவம் செய்யும் லோகேஷ்

Next Story

- Advertisement -