சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

சத்யராஜுக்கு இப்படி ஒரு சோகமா.. 4 வருட கோமா, மனம் திறந்த மகள்

Sathyaraj: 80 காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்த சத்யராஜ் இப்போது கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். வில்லன் அப்பா என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் இயக்குனர்களின் முதல் சாய்ஸ் இவர்தான்.

இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து இவர் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த சூழலில் அவருடைய மகள் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை போட்டு அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஊட்டச்சத்து நிபுணராக இருக்கும் சத்யராஜின் மகள் திவ்யா தன் அம்மா கடந்த நான்கு வருடங்களாக கோமாவில் இருப்பதாக தெரிவித்துள்ளார். சத்யராஜ் மனைவி மகேஸ்வரிக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக சிகிச்சை நடைபெற்றிருக்கிறது.

சத்யராஜ் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா.?

ஆனாலும் அவர் இப்போது கோமா நிலையில் இருக்கிறார். அது குறித்து கூறியிருக்கும் திவ்யா, அம்மாவை நாங்கள் வீட்டில் வைத்து தான் கவனித்து வருகிறோம். அப்பா தான் அம்மாவை எல்லா விதத்திலும் உடன் இருந்து பார்த்துக் கொள்கிறார்.

மருத்துவ சிகிச்சை தொடர்ந்து கொடுத்து வருவதால் அம்மா மீண்டு வந்து விடுவார் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். இந்த நேரத்தில் அப்பாவும் நானும் தாய்க்கு தாயாக இருந்து அன்பை பரிமாறிக் கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில் விரைவில் சத்யராஜின் மனைவி குணமடைய வேண்டும் என அனைவரும் ஆறுதல் கூறி வருகின்றனர். இதன் காரணமாகவே சத்யராஜ் தற்போது பிற மொழி படங்களில் நடிப்பதை முடிந்த அளவு தவிர்த்து விட்டு தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

Trending News