புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

4 வருடங்களாக கோமாவில் இருக்கும் சத்யராஜின் மனைவி.. திவ்யா சத்யராஜ் உருக்கம்

Sathyaraj: வில்லனாக அறிமுகமாகி தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சத்யராஜ். மார்க்கெட் குறைந்து இரண்டாவது இன்னிங்சை ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலை வந்து விட்டதை உணர்ந்து கொண்டு சுதாரித்ததில் சத்யராஜுக்கு இணையாக வேறு யாரையும் சொல்லிவிட முடியாது.

சட்டென தன்னுடைய கதை தேர்வை மாற்றிக் கொண்டு, ஹீரோ இமேஜை கழற்றி வைத்துவிட்டு குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வேறு பரிமாணத்தை காட்டி வருகிறார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் சினிமா உலகிலும் சத்யராஜுக்கு டிமான்டுகள் உண்டு.

திவ்யா சத்யராஜ் உருக்கம்

சினிமா மட்டும் இல்லாமல் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காகவும் பல இடங்களில் குரல் கொடுத்து வருகிறார் சத்யராஜ். இவருடைய மகன் சிபிராஜ் தமிழ் சினிமாவில் தன்னை ஒரு நல்ல கதாநாயகனாக நிலை நிறுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறார்.

மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய அம்மா பற்றி பகிர்ந்திருக்கும் விஷயம் எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. நடிகர் சத்யராஜின் மனைவி மகேஸ்வரி நான்கு ஆண்டுகளாக கோமாவில் இருக்கிறாராம்.

இவருக்கு பிஜி குழாய் மூலமாக தான் தான் உணவு எல்லாம் செல்கின்றதாம் . நான்கு வருடங்களாக சத்தியராஜ் சிங்கிள் பேரண்டாக இருக்கிறார், அவருக்கு நான் நல்ல அம்மாவாக இருந்து வருகிறேன் என திவ்யா சத்யராஜ் பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

Trending News