சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

வேற லெவலில் யோசித்த லோகேஷ்.. சத்யராஜ், சரத்குமார் வரிசையில் இடம் பிடித்த ஹீரோக்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று பல கோடி வசூல் சாதனையும் படைத்தது. இதன் மூலம் லோகேஷ் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். மேலும் பல முன்னணி நடிகர்களும் இவருடைய இயக்கத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தன்னுடைய படங்களில் ஏதாவது ஒரு வித்தியாசத்தை காட்டி வரும் லோகேஷ் விக்ரம் திரைப்படத்தின் மூலம் டாப் ஹீரோக்களை வில்லனாக மாற்றி இருக்கிறார். அதாவது சூர்யா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக இருந்து வருகிறார்கள்.

இவர்களை லோகேஷ் தன்னுடைய விக்ரம் திரைப்படத்தின் மூலம் கொடூர வில்லனாக காட்டி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் வில்லத்தனம் பாராட்டப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்திலும் அவருடைய நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.

இதனால் அவரைத் தேடி பல நெகட்டிவ் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். சில காலங்களுக்கு முன்பு வரை சினிமாவில் வில்லனாக நடித்து வந்த நடிகர்கள் பின்னர் ஹீரோ அவதாரம் எடுத்தனர். இதற்கு உதாரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சத்யராஜ், சரத்குமார் ஆகியோரை சொல்லலாம்.

இவர்கள் எல்லாம் ஆரம்ப காலத்தில் வில்லனாக நடித்து மிரட்டியவர்கள் தான். அதன் பிறகு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இன்று ஒரு பெரிய ஹீரோக்களாக உருவெடுத்துள்ளனர். ஆனால் லோகேஷ் சூர்யா, விஜய் சேதுபதி போன்ற பெரிய ஹீரோக்களை வில்லனாக மாற்றிவிட்டார்.

இதன் மூலம் அவர் வேற லெவலில் யோசித்திருக்கிறார். ஏனென்றால் பெரிய ஹீரோக்களை வில்லனாக நடிக்க வைக்க எந்த இயக்குனர்களும் முன் வர மாட்டார்கள். அப்படி இருக்கும் போது வித்தியாசமாக யோசித்து அதில் வெற்றியும் கண்ட லோகேஷ் கனகராஜ் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

Trending News