சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

என்னோட காதலி கொடூரமா தண்டவாளத்தில் பிணமா கிடந்தார்.. கேட்கவே கொல நடுங்கும் சத்யாவின் கதை

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் சத்யா சமீபத்தில் கதை சொல்லும் டாஸ்கில் சொன்ன விஷயம் நம்மில் பலரை நடுங்க வைத்திருக்கும். மேலும் எப்படி இந்த மனுஷன் இவ்வளவு கஷ்டத்தை தாண்டி இப்படி நிற்கிறார் என்ற ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்க்கையில் கடந்து வந்த பல சோகங்கள் பற்றி சொல்லுவது வழக்கமாக நடக்கும் சம்பிரதாயம்தான்‌. ஆனால் இந்த முறை அதை டாஸ்காக வைத்துள்ளது பிக் பாஸ். இது கொஞ்சம் கூட ஏற்புடையதாக இல்லை.

ஏன் என்றால் ஒருவர் தன் கதையை கண்ணீருடன் சொல்லும் வேளையில், எதிராளி போர் அடிக்கிறது என்பது போல முகத்தை வைத்துக்கொள்வதும், buzzer அழுத்தி கதையை நிறுத்த சொல்லுவதும் மனிதமே இல்லை என்று தான் தோன்றுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் சத்யா தான் கடந்து வந்த பாதையை சொல்லும்போது, நமக்கே கண்கள் கலங்கியது. ஆனால் அந்த நேரத்திலும் மனசாட்சி இல்லாமல் இந்த சிவகுமார் போர் அடிக்கிறது என்று சொல்லி buzzer அழுத்தியதை பார்க்கும்போது, “என்ன மனுஷன் இவரெல்லாம்..?” என்று தான் கேட்க தோன்றியது..

காதலியை கொடூரமாக கொன்ற கூட்டம்

அதாவது அவர் கல்லூரி படிக்கும் பருவத்திலேயே ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அந்த காதல் விஷயம் இரு வீட்டிற்கும் தெரிய வந்திருக்கிறது. தெரிந்த போது அந்த பெண்ணின் உறவினர்கள் தன்னுடைய ஊருக்கு சென்று விட்டார்களாம். அந்தப் பெண்ணும் வேறு வழியில்லாமல் அவர்களோடு சென்று இருக்கிறார். அப்போது ஒரு இடத்திற்கு போயிட்டு வரேன் என்று சத்தியாவிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

அங்கு போன இடத்தில் சிலர் கற்பழித்து அந்த பெண்ணை கொலை செய்து விட்டார்களாம். அந்த விஷயம் சத்யாவிற்கு சில நாட்களுக்கு பிறகு தான் தெரிந்திருக்கிறது. அதை பற்றி நண்பர்கள் சொல்லாமல் தான் சத்யாவின் காதலியின் உடலை பார்க்க கூட்டிட்டு போயிருக்கிறார்கள். அங்கு போன பிறகு அங்கு நடந்த கொடுமையை தெரிந்ததும் சத்தியா ரொம்பவும் மனதளவில் உடைந்துபோய்விட்டாராம்.

பல முறை தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளாராம். மேலும் தவறான பழக்கவழக்கங்களுக்கு addict ஆகிவிட்டாராம். இப்படி இருக்க கஷ்டப்பட்டு தான் அதிலிருந்து சத்யா மீண்டு வந்துள்ளார். சில வருடங்கள் கழித்துதான் பாடகி ரம்யாவை காதலித்திருக்கிறார்.

முதலில் ரம்யாவோடு நட்பாக தான் பழகி இருக்கிறார். பிறகு காதல் ஏற்பட்டது. இப்ப வரைக்கும் நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம் என்று சொன்ன சத்யா, அனைவரிடமும் ஒரு வேண்டுகோளையும் வைத்துள்ளார். “தயவுசெய்து குழந்தைகள் முகத்திற்காகவாது, பெற்றோர்கள் பிரியாமல் இருங்கள்” என்று கூறியிருக்கிறார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

Trending News