News | செய்திகள்
சதுரங்க வேட்டை 2 செய்த அதிரடி சாதனை!
சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கத்தில் அடுத்து வெளிவரப்போகிற படம்தாங்க சதுரங்க வேட்டை 2. இதன் முதல் பாகத்தை இயக்கியவர் வினோத்.
இரண்டாம் பாகத்தில் அரவிந்த் சாமி, திரிஷா, பிரகாஷ் ராஜ், சிம்ரன், டானியல் பாலாஜி, நாசர், ராதா ரவி போன்றோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் டீசர் இரண்டு நாட்களுக்கு முன் வெளியானது.
இந்த டீசர் வெளியான முதல் நாளே பத்து லட்சம் பேர் அதை பார்த்துருக்காங்க. இப்போ 11 லட்சம் பேரு இந்த டீசரை பார்த்துருக்காங்க. போகன் தோல்விக்கு பிறகு அரவிந்த் சாமி நடிக்கும் இந்த படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும்னு யாருமே எதிர்பார்க்கலைங்க.
இந்த டீசர்ல அரவிந்த் சாமி முகம் கொஞ்சம் முதிர்ச்சி அடைந்தது போல் தெரிந்தாலும், அவரது மேனரிசம் முந்தைய படங்கள் போல் ரொம்பவே அழகா இருக்கு. திரிஷாவும் ரொம்பவே அழகா இருக்காங்க.
டீசர் மட்டுமல்ல இந்த படமும் வெளியாகி மிகப்பெரும் வெற்றியடையும்னு படக்குழு நம்பிக்கையோடு சொல்லிருக்காங்க.
சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: வாழ்த்துக்கள்
