சச்சின், தோனி போல மாறிட்டாயே நட்ராஜ்! வைரலாகுது சதிஷ் பகிர்ந்த வேற லெவல் போட்டோ

தங்கராசு நடராஜன் – இவரின் கிரிக்கெட் வாழ்க்கை இப்பொழுது பலருக்கு கனவு பயணம் போல தோன்றலாம்.  இந்த ஆஸ்திரேலிய தொடரில் எதனை மறந்தாலும், பல வருடங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க முடியாத பெயராக நடராஜன் மனதில் பதிந்து விடுவார். நெட் பௌளராக டீம்மில் சேர்க்கப்பட்ட இவர் அதன் பின்னர் வருண் மற்றும் சைனிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கான டீம்மில் இடம் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை அழகாக பயன் படுத்தி வீரர்கள், வர்ணனையாளர்கள், ரசிகர்கள் என அனைவரது பாராட்டையும், ஆதரவையும் பெற்றுள்ளார்.

ஏற்கனவே ஷமி, உமேஷ், ஜடேஜா காயம் காரணமாக விளக, தற்பொழுது  பும்ராவுக்கும் காயம் ஏற்பட, அவருக்கு பதில்  டீம்மில் நடராஜன் கடைசி டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்படுவார் என பலரும் ஆருடம் கூறி வருகின்றனர். சின்னப்பம்பட்டி டு சிட்னி வரை சென்றுவிட்டார். ஆனால் இவர் கடந்து வந்த பாதையை அறிந்தவர்களுக்கு இவரின் வலி மற்றும் வேதனையும் புரியும்.

நடராஜனின் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் சிவகார்த்திகேயன், சதிஷ் என்பது நாம் அறிந்த செய்தியே. இந்நிலையில் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் சதிஷ் பதிவிட்ட போட்டோ ஒன்று வைரலாகி வருகின்றது.

“இத்தனை வருடங்களாக தமிழ் சினிமாவில் கல்லூரி விடுதி காட்சிகளில், சுவரில் உள்ள இடத்தை சச்சின், தோனி, கோலி போன்ற வீரர்கள் அலங்கரித்ததை பார்த்திருப்போம், ஆனால் இன்று போஸ்டர் உள்ளது. உனது வளர்ச்சியை பார்க்கும் போது பெருமையாக உள்ளது சகோதரா. இந்த புதிய ப்ரொஜெக்டில் சோக் செல்வன் மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் உடன் நடிக்கிறேன்.” என அந்த ட்வீட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

sathish shares shooting spot photo