fbpx
Connect with us

Cinemapettai

இருமுகன் கெட்டப்பில் நடிகர் சதிஸ்.. இதென்னடா விக்ரமுக்கு வந்த சோதனை

Photos | புகைப்படங்கள்

இருமுகன் கெட்டப்பில் நடிகர் சதிஸ்.. இதென்னடா விக்ரமுக்கு வந்த சோதனை

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் இல்லாத நேரத்தில் பிரபலமானவர் தான் நடிகர் சதீஷ். இன்றுவரை இவரது பல காமெடிகளில் சில காமெடி காட்சிகளில் மட்டுமே ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.

இருந்தாலும் இளம் காமெடியனாக இருப்பதால் இளம் நடிகர்கள் படத்தில் அனைத்திலும் வாய்ப்பு பெற்று ஓரளவு முன்னணி காமெடியன் ரேஞ்சுக்கு வளர்ந்துள்ளார்.

சதீஷ் நடித்த படங்களிலேயே சிறந்த காமெடி படம் என்றால் அது தமிழ்படம்2 தான். மிர்ச்சி சிவா நடிப்பில் தமிழமுதன் இயக்கிய தமிழ் படம் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களையும் கலாய்த்து தள்ளி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம்.

ரஜினி, விஜய், அஜித், கமல் என அனைத்து நடிகர்களையும் பாரபட்சமில்லாமல் ஓட்டி தள்ளி இருப்பார்கள். அந்த வகையில் அதன் தொடர்ச்சியாக வந்த படம்தான் தமிழ் படம் 2. இந்த படத்தில் தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் வித்தியாசமான கெட்டப்புகளில் வருவதைப்போல சதீஷ் அனைத்து வேடங்களிலும் வருவார்.

அதில் சில கெட்டப் படத்தில் பயன்படுத்தப் படவில்லை என தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அதில் ஒன்றுதான் விக்ரம் இரட்டை வேடத்தில் கலக்கிய இருமுகன் வேடம்.

அதிலும் லவ் என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் செய்த அதே கெட்டப்பை போட்டு ரவுசு விடுகிறார் நம்ம சதீஷ்.

love-sathish

love-sathish

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top