fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சண்டை போடும் நாய், கடிக்கும் சதீஷ்.. கலகலப்பாக வெளியான நாய் பட டீசர்

naai sekar

Videos | வீடியோக்கள்

சண்டை போடும் நாய், கடிக்கும் சதீஷ்.. கலகலப்பாக வெளியான நாய் பட டீசர்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் சதீஷ். இவர் கிட்டத்தட்ட பல நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். ஆனால் சதீஷ் நாய் சேகர் எனும் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இப்படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

நடிகர் சதீஷ் இப்படத்தில் நாயுடன் சேர்ந்து இவர் செய்யும் சேட்டைகள் தான் படத்தின் பெரிய அளவில் பேசப்படும் என படக்குழுவினர் கூறியுள்ளனர் அதுமட்டுமில்லாமல் நடிகர் சதீஷ் இப்படத்தில் தனது முழு காமெடி திறமையும் காட்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாய் சேகர் திரைப்படம் வெளியானால் சதீஷ்க்கு பெரிய அளவில் ரசிகர்கள் வரவேற்பு கிடைக்கும் எனவும் இப்படத்தில் காமெடியை தாண்டி காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் நடிகர் சதீஷ் சிறப்பாக நடித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

தற்போது படக்குழுவினர் நாய் சேகர் படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளனர். சதீஷ் தனது கலகலப்பான காமெடியுடன் வெளியாகி உள்ளது தற்போது இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top