Tamil Nadu | தமிழ் நாடு
போலிஸால் அடித்து சிதைக்கப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் பின்புறம்.. வெளியான போஸ்ட்மார்ட்டம் வீடியோவால் பரபரப்பு
கொரோனாவின் பாதிப்பினால் சாத்தான்குளம் வழக்கில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போய்விட்டது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்றப்பட்டு தீவிரமடையும் சூழ்நிலையில் சிபிஐ அதிகாரி மற்றும் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்ட காவல்துறையினருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் சாத்தான்குளம் வழக்கில் சற்று தாமதம் ஏற்படுவது போல் தெரிகிறது, மருத்துவ பரிசோதனையின் போது அதாவது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எடுக்கும் வீடியோ வெளிவந்துள்ளது.
உண்மையை மக்களுக்கு வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதற்காக நக்கீரன் ஆதார வீடியோவை வெளியிட்டு உள்ளது, சமூக வலைத்தளங்கள் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்க்க வேண்டுமென்றால் மனதை கல்லாக்கி கொள்ள வேண்டியது தான், இது போன்ற கொடுமைகள் இனி நடக்காமல் இருப்பதற்கு நக்கீரன் ஆதாரங்களை வெளியிட்டு வருவது மக்களுக்கு நீதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.
தெளிவான காயங்களுடன் வீடியோ பார்க்க: Click Here
