fbpx
Connect with us

Cinemapettai

சாத்தான்குளம் போலிசுக்கு ரஜினி, அஜித், விஜய் ஆதரவா? இதற்கு குரல் இல்லை என்றால் இனி எதற்கும் பேச கூடாது

Tamil Nadu | தமிழ் நாடு

சாத்தான்குளம் போலிசுக்கு ரஜினி, அஜித், விஜய் ஆதரவா? இதற்கு குரல் இல்லை என்றால் இனி எதற்கும் பேச கூடாது

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் காவல்துறையினர் அடித்து துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் தங்களது எதிர்ப்புகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு முன்னதாக இதுபோன்ற அத்து மீறல்களில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு எந்த ஒரு அதிகபட்ச தண்டனையும் கிடைக்கவில்லை என்பது தான் கொடுமை. இந்த வழக்கில் அப்படி நடக்கக் கூடாது என்பதற்காக மக்கள் தற்போது போராடி வருகின்றனர், இந்த சூழ்நிலையில் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் குரல் கொடுக்காதது மிகவும் வேதனை அளிக்கிறது.

அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், தல அஜித் போன்றவர்கள் தற்போது வரை எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. நடிகர் சூர்யா அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்னதாக போலீஸ் நடத்திய தூத்துக்குடி சம்பவத்திற்கு ரஜினிகாந்த் சமூக விரோதி ஊடுருவியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்று சொல்லிருப்பார். அப்பொழுது மட்டும் போலிசுக்கு ஆதரவா ரஜினி பேசுவார். ஆனால் இதற்கு தற்போது வரை எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. ஏனென்றால் தானாகவே முன்வந்து வாயை புண்ணாக்கிக் கொள்ள வேண்டாமென்று கப்சிப் என்று இருக்கிறாரோ தெரியவில்லை.

இதுபோன்ற சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தால் மட்டுமே நாளை அரசியலில் சாதிக்க முடியும். தற்போது குரல் கொடுக்காதது பலரின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தளபதி விஜயின் தரப்பில் இருந்து தற்போது வரை எந்த ஒரு அறிக்கையும் விடவில்லை, அப்படி அறிக்கை  விட்டாலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேராகச் சென்று உதவி செய்வார். ஆனால் அதுவும் நடக்கவில்லை என்பதுதான் ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை அளிக்கிறது.

தல அஜித்தை பொருத்தவரை மறைமுகமாக ஏதாவது உதவிகளை செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அவரும் ஒன்னும் பண்ணவில்லை. இப்படி முன்னணி நடிகர்கள் குரல் கொடுக்காதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அஜித்தை கூட விட்டு விடலாம் ஏன் என்றால் இவருக்கு மக்கள் இயக்கம், மக்கள் மன்றம் அப்படிலாம் ஒன்னும் இல்லை. மக்கள் பெயரில் இயக்கம், மன்றம் என ஆரம்பித்து மக்களுக்கு பிரச்சனை வரும்போது அமைதியாக இருப்பது அநியாயம்.

குரல் கொடுப்பதும் கொடுக்காததும் அவரவர் விருப்பம்தான் ஆனால் வேறு ஏதேனும் மக்களுக்கு பிரச்சனை வரும்பொழுது மட்டும் குரல் கொடுத்தாலோ அல்லது போலிசுக்கு ஏதேனும் பிரச்சனை வந்தால் உடனே குரல் கொடுத்தாலோ மக்கள் இனி கழுவி ஊற்றுவார்கள் என்பது நினைவில் இருக்கட்டும். அதனால் இப்பொழுது போல எப்பொழுதும் வாய் மூடியே இருப்பது நல்லது.

Continue Reading
To Top