Connect with us
Cinemapettai

Cinemapettai

காவல் துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன்.. பிரபல இயக்குனர்

India | இந்தியா

காவல் துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன்.. பிரபல இயக்குனர்

சாத்தான்குளத்தில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் விசாரணை நடைபெற்று வருகின்றது இரண்டு அப்பாவியை அடித்து துன்புறுத்தி சிறைச்சாலையில் அடைந்தபோது அப்பாவும், மகனும் இறந்துள்ளன. இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது, பல பிரபலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முக்கியமாக சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதெல்லாம் ஒருபுறமிருக்க போலீசின் வாழ்க்கையை மையமாக வைத்து கதை இயக்கிய இயக்குனர் ஹரி இந்த சம்பவத்திற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதாவது சாத்தான்குளத்தில் நடந்தது போன்று இனி நடக்கக் கூடாது, அதற்காக குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் நீதி கிடைக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படங்கள் இயக்கியதற்காக மிக மிக வேதனைப்படுகிறேன் என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை தீவிரப் படுத்தப் படவேண்டும் குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்.

தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் சரியான தண்டனை கிடைக்குமா.? நியாயமும் நீதியும் கிடைப்பது கேலிக்கூத்தாக்கி விடும் என்று சமூக ஆர்வலர்கள் விவாதித்து வருகின்றனர்.

ஏனென்றால் இதற்கு முன்னதாக காவல்துறையினரால் பாதிக்கப்பட்ட அல்லது இது போன்று கொலை செய்யப்பட்ட எந்த ஒரு தனிமனிதனுக்கும் நியாயம் கிடைத்ததுல்லை.

saami-hari-cinemapettai

saami-hari-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top