நகைச்சுவை நடிகராக அடுத்தடுத்து ஹிட்டடித்துக் கொண்டிருந்த நம் சந்தானம் ஹீரோவாகிறேன் என்று களமிறங்கி வரிசையாக தோல்விப்படங்களை கொடுத்துக் கொண்டிருந்தார்.

சின்னத்திரையில் சந்தானத்தை அறிமுகம் செய்த ராம்பாலா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த தில்லுக்கு துட்டு படம் சந்தானத்திற்கு சுமாரான வெற்றிப் படமாய் அமைந்தது. இதனை தொடர்ந்து தற்போது சர்வர் சுந்தரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.


இதுவரை சந்தானத்தின் நகைச்சுவையை மட்டுமே வைத்து தொடர் வெற்றியை கொடுத்துக்கொண்டிருந்த இயக்குனர் ராஜேஷ் அவர்கள் தற்போது எடுக்கும் அனைத்து படங்களும் படு பிளாப் ஆகி வருவதால் மீண்டும் சந்தானத்துடன் கூட்டணி சேர திட்டமிட்டுள்ளார்.

santhanam-real-stunt

இம்முறை சந்தானத்தை ஹீரோவாக்கி முழு நகைச்சுவை படத்தை இயக்கவுள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று சந்தானம் கூறியுள்ளார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: டேய் கைப்புள்ள கொரலி வித்த காட்டுறானுங்க நம்பி ஏமாந்துறாத…