fbpx
Connect with us

Cinemapettai

தெறி படத்திற்கு பதிலாக வெற்றிவேல் ரிலீஸ்!

News | செய்திகள்

தெறி படத்திற்கு பதிலாக வெற்றிவேல் ரிலீஸ்!

Sasikumar’s-Vetrivelஇளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம் கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆகி தமிழகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக இரண்டு வாரங்களுக்கு வேறு எந்த படங்களும் ரிலீஸ் ஆகாது என்றே கூறப்பட்டது.

எனவே பல முன்னணி நடிகர்களின் படங்கள் ஏப்ரல் 29ஆம் ரிலீஸ் என்றே கூறப்பட்டது. அந்த வரிசையில் சசிகுமாரின் ‘வெற்றிவேல்’ திரைப்படமும் ஏப்ரல் 29ஆம் தேதி ரீலீஸ் என முதலில் கூறப்பட்ட நிலையில் பின்னர் திடீரென ஏப்ரல் 22ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு காரணம் ‘தெறி’ படத்தை ரிலீஸ் செய்யாத செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்கள் இந்த படத்தை முன்கூட்டியே ரிலீஸ் செய்தால் திரையிட தயார் என்று கூறியதுதான் என்று கூறப்படுகிறது.

கோலிவுட் திரையுலகில் இதுவரை ஒரு படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன வரலாற்றைத்தான் பார்த்திருக்கின்றோம். ஆனால் இந்த படம் திட்டமிட்ட தேதிக்கு முன்பே ரிலீஸ் ஆகிறது. என்பது குறிப்பிடத்தக்கது. இதை இசையமைபாளர் டி.இமான் தனது டுவிட்டரில், “#Vetrivel One of the rare activity in cinema! Release preponed! Theatrical release From April 22nd! என்று குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top