தளபதி-69 நடிகையுடன் ஜோடி சேரும் சசிகுமார்.. 90ஸ்ல இவங்க ஜோடி போடாத ஹீரோவே கிடையாது

90களில் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்த அந்த நடிகை , இயக்குனரும் நடிகருமான சசிக்குமாருடன் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளார். மும்பையைச் சேர்ந்த நடிகையின் இயற்பெயர் ரிஷுபாமா. பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்த இவர் சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற விரும்பத்துடன் இருந்தார். அப்போது பிரபலமான இருந்த தூர்தர்ஷனில் மெட்ரோ சேனலில் சூப்பர் ஹிட் முகாபுலா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்தி வழங்கியதன் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார்.

அந்த நிகழ்ச்சிதான் அவர் இந்தி திரையுலகில் நுழைய காரணமாக அமைந்தது. எனவே 1995 ஆம் ஆண்டு ‘சனம் ஹர்ஜாய் ‘என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானாலும் அது தோல்விப்படமாக அமைந்தது. 1996 ஆம் ஆண்டு ‘தேரே மேரே சப்னே’ படம் வெற்றிப்படமாக அமைந்ததால் அவரை ரசிகர்கள் கொண்டாடினர்.

தமிழில் 1997 ஆம் ஆண்டு விஜய்-யின் ‘ஒன்ஸ்மோர்’ படம் மூலம் அறிமுகமாகி, அடுத்து, பிரபுதேவா, அஜித், கமல்ஹாசன், ரஜினிகாந்த், மலையாளத்தில் மம்முட்டி, கன்னடத்தில் சிவராஜ்குமார் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் அவர் நடிப்பு மற்றும் ‘நடனம்’ அவருக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. 2000 களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருந்தார். அந்த நடிகை வேற யாரும் இல்ல இடுப்பழகி சிம்ரன் தான்.

சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த அவரும் கிசுகிசுவில் சிக்காமல் இல்லை. பீக்கில் இருந்தபோதே ‘தீபக் பக்கா’ என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் 2009 ஆம் ஆண்டு சுந்தர் சியின் ‘ஐந்தாம் படை’ மூலம் ரீ எண்டி கொடுத்தார். அதன்பின், ரஜினியுடன் ‘தர்பார் ‘உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், சமீபத்தில் டாப் ஸ்டார் பிரசாந்துடன் இணைந்து ‘அந்தகன்’ படத்தில் வில்லியாக மிரட்டியிருந்தார்.

எனவே மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர திட்டமிட்டுள்ள அவர் தற்போது சசிக்குமாருடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார். ‘அயோத்தி’ படத்தின் மூலம் பிரேக் கொடுத்த சசிக்குமார், இயக்குனர் சரவணனுடன் கூட்டணி அமைத்து செப்டம்பர் 20ல் வெளியான ‘நந்தன்’ படம் பட்டியலின மக்களை எப்படி அடக்குமுறைக்கு உள்ளாக்குகிறார்கள் என்பதை இக்கதை நடிப்பின் மூலம் ரசிகர்களுக்கு கடத்தியிருந்தனர்.

இப்படமும் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் அறிமுகம் இயக்குனர் இயக்கவுள்ள இப்படத்தில் சசிக்குமாருடன் இணைந்து சிம்ரன் நடிக்கவுள்ளார். இப்படத்தை குட் நைட் படத்தை தயாரித்த ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், விரைவில் இப்பட அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சசிக்குமாரின் சமீபத்திய படங்கள் வித்தியாசமாகவும் நல்ல கதை அம்சத்துடன் கூடியதாக உள்ள நிலையில், சிம்ரனும் அவர் இணைந்து நடிக்கும் படமும் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் அமையும் என ரசிகர்கள் கருத்துக் கூறி வருகின்றனர். மேலும், சிம்ரன் அடுத்து, அவரது கணவர் தயாரிப்பில் ஒரு படமும், லோகேஷ்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பேண்டஷி படத்தில் நடித்து வரும் நிலையில், விஜய் 69 படத்திலும் நடிக்கவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News