fbpx
Connect with us

முதல் முறையாக நிக்கி கல்ராணி படத்துக்கு யூ சான்றிதழ்.. குஷியான படக்குழு.. வியப்பில் ரசிகர்கள்!

nikki-galrani

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதல் முறையாக நிக்கி கல்ராணி படத்துக்கு யூ சான்றிதழ்.. குஷியான படக்குழு.. வியப்பில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் முன்னணி ஹீரோவாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சசிகுமார். இவர் நடிப்பில் வெளிவந்த ‘நாடோடிகள்’, ‘நாடோடிகள் 2’ போன்ற படங்கள் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சசிகுமாரும், நிக்கிகல்ராணியும் இணைந்து நடித்துள்ள படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு சான்றிதழையும் பெற்று விட்டதாம். இதனால் அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி படக்குழுவினரும் படு குஷியில் உள்ளனர்.

அதாவது சசிகுமார் தற்போது ராஜவம்சம், நாநா, கொம்பு வச்ச சிங்கம்டா, எம்ஜிஆர் மகன், பரமகுரு போன்ற படங்களில் அடுத்தடுத்து பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் ஏற்கனவே ‘எம்ஜிஆர் மகன்’ என்ற படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது ‘ராஜவம்சம்’ படமும் ரிலீசுக்கு தயாரானதால் அந்தப்படத்தை சென்சாருக்கு அனுப்பி உள்ளனர் படக்குழுவினர்.

இதைத்தொடர்ந்து ‘ராஜ வம்சம்’ சென்சாரை முடித்துவிட்டு யூ சான்றிதழை  பெற்றிருப்பது படக்குழுவினரை குஷி ஆக்கியுள்ளது. ஏனெனில் இந்தப் படத்தில் கவர்ச்சி கன்னியான நிக்கி கல்ராணி ஹீரோயினாக நடித்துள்ளார்.

இதனால் என்ன சான்றிதழ் வருமோ என்று பரிதவித்து இருந்த படக்குழுவினர் யூ சான்றிதழைக் கண்டதும் தாறுமாறான குஷியில் உள்ளனர்.

rajavamsam-cinemapettai

rajavamsam-cinemapettai

மேலும் தியேட்டர்கள் திறந்தபின் இந்தப் படம் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ‘நிக்கிகல்ராணி நடிச்சும் இந்தப் படத்துக்குகு யு சர்டிபிகேட் கொடுத்துருக்காங்களா!’ என்ற வியப்பில் ஆழ்ந்துள்ளனர் நெட்டிசன்கள்.

Continue Reading
To Top