Tamil Cinema News | சினிமா செய்திகள்
கொம்பு வச்ச சிங்கம்டா-சசிகுமார் படத்தில் யார் நடிகை தெரியுமா.? ரசிகர்கள் குஷியில்
காதலும் கடந்து போகும், கவண் ஆகிய படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த ஹீரோயின் madonna sebastian தற்போது சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

sasikumar
இவர் மலையாள படமான பிரேமம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர், இந்த திரைப்படம் தான் இவருக்கு முதல் திரைப்படம் பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளியான திரைப்படம் சுந்தரபாண்டியன் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது, இந்த படத்திற்கு பிறகு எஸ் ஆர் பிரபாகரன் “இது கதிர்வேலன் காதல்” சத்திரியன் ஆகிய படங்களை இயக்கினார் தற்பொழுது நடிகர் சசிகுமாரை வைத்து கொம்பு வச்ச சிங்கம்டா என்ற படத்தை இயக்க இருக்கிறார்.
படத்தின் ஹீரோயின் யார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது முதலில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என தகவல் வெளியாகியது ஆனால் இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது, மேலும் தற்பொழுது madonna sebastian இந்த படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
