sasikumar
sasikumar

சசிகுமார் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் மடோனா செபாஸ்டின் நடிக்கிறார். சசிகுமார் மற்றும் லட்சுமிமேனன் நடிப்பில் உருவாகிய சுந்தரபாண்டியன் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் எஸ் ஆர் பிரபாகரன். இவர் மீண்டும் முதல் படத்தின் கதாநாயகனான சசிகுமார் உடனே மறுபடியும் கைகோர்க்கிறார்.

இவர் சமீபத்தில் கதிர்வேலன் காதல் மற்றும் சத்ரியன் இரண்டு படங்களை தோல்வி படமாக கொடுத்தவர். கொம்பு வச்ச சிங்கம்டா என்று தலைப்பை வைத்துள்ள இப்படத்தில் முக்கிய  கதாபாத்திரங்களில் சூரி, யோகி பாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரிஷ் பேராடி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமானுஜம், இந்தர் குமார் ஆகிய நபர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.

1990 மற்றும் 1994 இடைப்பட்ட காலகட்டத்தில் நடந்த தமிழகத்தின்  சிறு பகுதிகளில் நடந்த பரபரப்பான சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்படுகிறது. பொள்ளாச்சி, பழனி, கோவில்பட்டி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் இப்படம்ஷூட்டிங் நடைபெற இருக்கிறது.

ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு திபூ நிமண் தாமஸ் இசை அமைக்கிறார். சமீபத்தில் குற்றம்-23 மற்றும்  தடம் ஆகியபடங்களைத் தயாரித்துள்ள இந்திரகுமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

கொம்பு வச்ச சிங்கம்டா எனும் தலைப்பு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அப்ப ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் கொம்பு வச்ச சிங்கம்டா என்னும் பாடலில் இருந்து எடுக்கப்பட மாதிரி தெரிகிறது. இந்தமுறை கண்டிப்பாக சசிகுமார் வெற்றிபெறுவார் என பார்க்கலாம்.

அதிகம் படித்தவை:  சசிகுமாரும் சமுத்திரக்கனியும் கூட்டணி மீண்டும் இணைகிறது!