Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜோதிகாவுடன் நடிக்கும் சசிகுமார்.. என்ன கதாபாத்திரம் தெரிந்தால் மெர்சல் ஆயிடுவிங்க
நடிகை ஜோதிகா திருமணத்திற்குப் பிறகு மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் நடிப்பில் வெளிவந்த ராட்சசி, காற்றின் மொழி, 36 வயதினிலே, ஜாக்பாட் என வித்தியாசம் காட்டி ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது பாபநாசம் புகழ் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகா மற்றும் கார்த்தி நடித்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைத்தொடர்ந்து பொன்மகள் வந்தாள் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் பாக்கியராஜ், பாண்டியராஜ், சமுத்திரக்கனி, சூரி போன்றோரும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் நரேன் மற்றும் சூரி நடிப்பில் வெளியான கத்துக்குட்டி படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் புதிய படமொன்றில் ஜோதிகா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
அதில் ஜோதிகாவுக்கு அண்ணனாக நடிகர் சசிகுமார் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
பாவம் மனுஷன்.. ஹிட் கொடுக்க முடியாமல் கடைசியில் மனம் மாறி விட்டார் போல.
