sasikumar
sasikumar

சசிக்குமார் பல கருத்துள்ள படங்களை கொடுத்தவர். இவருடைய படங்களில் அழுத்தமான கதை இருக்கும். சில முக்கிய படங்களை இயக்கியவர் தற்போது நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

நேற்று செய்தித்தாளில் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பளு தூக்கும் வீராங்கனைகள் மூவர் பால் வியாபாரம் செய்து தங்களுடைய படிப்பு செலவை சமாளித்து வருவதாகவும் சொல்லப்பட்டிருந்தது.

அதிகம் படித்தவை:  இந்திய திரைப்படங்கள் என்றால் சீன அதிபருக்கு உயிராம்... வெளியான சூப்பர் தகவல்

உடன் பிறந்த சகோதரிகளான இவர்கள் அப்பாவின் வருமானம் போதுமானதாக இல்லாமல் இருப்பதால் இப்படி செய்துவருவதாக கூறியிருந்தார்கள்.

மாநில அளவிலும், தேசிய அளவிலும் சாதித்துள்ள இவர்களின் வளர்ச்சிக்கு யாரேனும் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என அவர்களின் தந்தை கூறியிருந்தார்.

கத்துகுட்டி பட இயக்குனர் சரவணன் இதை ட்விட்டரில் குறிப்பிட அதற்கு சசிகுமார், மூவரும் இனி என் சகோதரிகள். அவர்களின் செலவு நான் ஏற்கிறேன். பண உதவிக்கும் ஏற்பாடு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.