பெங்களூரு: தாம் அரசியலுக்கு வராமல் இருந்தால் தினகரனுக்கு இந்த கதியே ஏற்பட்டிருக்காதே என்று தம்மை சந்தித்த நாமக்கல் வழக்கறிஞரிடம் சசிகலா கதறியழுதிருக்கிறார். ஜெயலலிதா இருந்த காலத்திலேயே சசிகலா உறவினர்களில் தினகரனுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சசிகலாவின் அரசியல் வாரிசாக அடையாளம் காணப்பட்டவர் தினகரன். 2011-ம் ஆண்டு முதல் ஜெயலலிதா மறைவு வரை அரசியல் பக்கமே எட்டிப்பார்க்கவில்லை தினகரன். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலாவுடன் போயஸ் கார்டனில் டேரா போட்டார் தினகரன்.

துணைப் பொதுச்செயலர்

சசிகலாவுக்கு பின்னிருந்து முழுமையாக அதிமுகவை இயக்கிக் கொண்டிருந்தார் தினகரன். சசிகலா சிறைக்குப் போன நிலையில் அதிமுக துணைப் பொதுச்செயலராகி ஆர்கே நகர் தேர்தலிலும் போட்டியிட்டார்.

அடுத்தடுத்த வழக்குகள்

ஆனாலும் டெல்லி தினகரனை சும்மாவிடவில்லை. இப்போது தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தது, ஹவாலா வழக்குகள் என அடுத்தடுத்து நெருக்கடியின் உச்சத்தில் தினகரன் சிக்கிக் கொண்டிருக்கிறார்.
தம்மாலே இந்த கதி

இது தொடர்பாக சிறையில் தம்மை சந்தித்த நாமக்கல் வழக்கறிஞரிடம் குமுறி கொட்டியுள்ளார் தினகரன். தாம் அரசியலுக்கே வராமல் ஒதுங்கியிருந்தால் தினகரன் இந்த அளவுக்கு துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருந்திருக்காது…என்னால்தான் தினகரனுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது என கதறியழுத்துள்ளார்.

அமைதி காக்கும் இளவரசி

சசிகலாவுக்கு அந்த வழக்கறிஞர்தான் ஆறுதல் கூறியுள்ளார். சசிகலாவுடன் சிறையில் இருக்கும் இளவரசியோ எதைப் பற்றியுமே கவலை இல்லாமல் இருக்கிறாராம்.