fbpx
Connect with us

Cinemapettai

இதைத்தான் சசிகலா விரும்புவார்.. முதல்வரை திடீரென சந்தித்த அமமுக புகழேந்தி.. பரபரப்பு பேட்டி

Politics | அரசியல்

இதைத்தான் சசிகலா விரும்புவார்.. முதல்வரை திடீரென சந்தித்த அமமுக புகழேந்தி.. பரபரப்பு பேட்டி

டிடிவி தினகரன் மீது அதிருப்தியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டார்.

பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,” இரண்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க வந்துள்ளேன். வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டேன். உண்மையிலும் நெஞ்சார்ந்த இதயபூர்வமாக எனது வாழ்த்துக்களை முதலமைச்சருக்கு தெரிவித்தேன்.

ஜெயலலிதா அவர்களுக்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் பணியாற்றினேன். அப்பொழுது 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கண்டோம். இதே போன்று இரண்டு தேர்தல்களிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது.

ஜெயலலிதா இருந்தால் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோமோ அதே அளவு, விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

மாபெரும் வெற்றியை முதலமைச்சர் பெற்றுக் கொடுத்துள்ளார். இப்பொழுது அதிமுகவில் சேர வரவில்லை. வாழ்த்து சொல்ல வந்தேன் . அதிமுகவில் சேர்வதாக இருந்தால் உங்களிடத்தில் கூறிவிட்டுத்தான் சேர்வேன்.

இந்த ஆட்சி ஜெயலலிதா ஆட்சி. எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி. வரலாறு காணாத அளவு வெற்றியை முதலமைச்சர் பெற்றுக் கொடுத்துள்ளார். இதைத்தான் சசிகலா விரும்புவார்.” என்று புகழேந்தி தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top