ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கொண்டார். இதனை தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவரோடு சேர்த்து இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தங்களை சிறை தண்டனையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதற்காக சில விளக்கங்களை பெறவும், அவர்களுடைய கையெழுத்தை பெறுவதற்காகவும் சிறையில் உள்ள சசிகலாவை அவருடைய வக்கீல்கள் சந்தித்து பேசினர்.

அப்போது மனதுக்குள் இருந்த பாரங்களை எல்லாம் இறக்கி வைப்பது போல அனைத்தையும் வழக்கறிஞர்களிடம் சசிகலா கொட்டி தீர்த்துள்ளார். குறிப்பாக தமக்கும் தனது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இவ்வளவு இன்னல்கள் நேருவதற்கு நடராஜனும் தினகரனுமே முக்கிய காரணம் என்று புலம்பி தள்ளி இருக்கிறார்.

அதிகம் படித்தவை:  மாணிக் பாஷாவை நினைவுபடுத்தும் வகையில் புதிய போஸ்டருடன், பேட்ட இசை வெளியீட்டு தேதியை அறிவித்த சன் பிக்ச்சர்ஸ்.

குறிப்பாக ஜெயலலிதா இறந்த பின்னர் வாயை வைத்து கொண்டு சும்மா இருக்காமல் நாங்கள்தான் அதிமுக குடும்ப அரசியல்தான் நடத்துவோம் என்று தஞ்சாவூரில் நடந்த விழாவில் நடராஜன் பேசினார். அப்போதே மத்திய அரசின் கழுகு பார்வை சசிகலா குடும்பத்தின் மீது விழ ஆரம்பித்தது.

அதிகம் படித்தவை:  கோலிசோடா-2 படத்தில் இருந்து மாஸான சில நிமிட காட்சி.!

அடுத்து சசிகலாவை கேட்காமல் ஆர்.கே நகர் தேர்தலில் தன்னைத்தானே வேட்பாளராக அறிவித்து கொண்டு தினகரன் களமிறங்கியது மத்திய அரசின் கோபத்தை இன்னும் அதிகம் ஆக்கிவிட்டது.

இந்த இரண்டு பேரின் தன்னிச்சையான நடவடிக்கை மற்றும் அறிவிப்புதான் இன்று மொத்த குடும்பத்தையே சிக்கலுக்கு ஆளாக்கி உள்ளது என்று சசிகலா புலம்பி தள்ளி உள்ளார்.