சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலா சில சலுகைகள் மூலம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே விடுதலையாக வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா சிறையில் இருக்கும் நாட்களின் போது அவர் ஒரு கைத்தொழிலை செய்தால், அதன் அடிப்படையில், மாதம் 6 நாட்கள் அவருக்கு சலுகை அளிக்கும் அதிகாரம் சிறை அதிகாரிகளுக்கு உள்ளது.

அதேபோல், தண்டனைக் காலத்தில் அவர் நன்னடத்தையுடன் நடந்துகொண்டால் மாதம் 6 நாட்கள் சலுகை அளிக்கலாம். இதுபோக, நன்னடத்தையை காரணம் காட்டி, ஒவ்வொரு வருடமும் கூடுதலாக 20 நாட்களுக்கு சிறப்பு சிறை நேரம் வழங்கப்படும்.
இது நடந்தால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நான்கு வருட சிறை வாழ்க்கையில், மூன்றில் ஒரு பங்கு மட்டும் அனுபவித்தால் போதும் என சிறை சட்டம் குறிப்பிடுகிறது.

இது தவிர, சிறையில் சமையல் செய்வது, தூய்மை பேணுவது, நோய் வாய்ப்பட்ட சிறைக்கைதிகளுக்கு உதவுவது போன்ற செயல்களை செய்யும் சிறை கைதிகளுக்கு மாதம் 7 நாட்கள் சலுகை வழங்கும் அதிகாரமும் சிறை அதிகாரிகளுக்கு உண்டு. ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்த நாட்கள் கணக்கிடப்பட்டு விலக்கு அளிக்கப்படும் என கூறுகிறது சிறை சட்டம்.

அது சரி இந்த சட்டம் எல்லாருக்கும் பொருந்துமா என்பதையும் சட்டம் தெளிவுபடுத்த வேண்டும்.