fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சசிகலா சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் : உச்சநீதிமன்றம் அதிரடி நடவடிக்கை!

sasia_high-court

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சசிகலா சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் : உச்சநீதிமன்றம் அதிரடி நடவடிக்கை!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகிய 4 பேருக்கும் பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா 4 ஆண்டு சிறை தண்டனை 10 கோடி அபராதம் விதித்து தீர்பளித்தார்.

இந்த தீர்ப்பினை எதிர்த்து பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதன் பிறகு நீதிபதி குமாரசாமி தனி நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை ரத்து செய்து 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகிய 3 பேருக்கும் சிறை தண்டனை உறுதி செய்து உத்தரவிட்டது.

மேலும், சசிகலா மற்றும் இளவரசி, திவாகரன் ஆகிய 3 பேரும் முறைகேடாக பெற்ற சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top