சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அங்கு அடிக்கடி தியானத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவும், இளவரசியும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சிறைவளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து கொண்டு அடிக்கடி பேசிக்கொள்வதாக கூறப்படுகிறது.

சசிகலா, இளவரசியுடன் பேசும் நேரம் தவிர அடிக்கடி தியானத்திலும் ஈடுபடுகிறாராம். இவர் ஏற்கனவே தியானம் மற்றும் யோகா பயிற்சி பெற்றவர் என்று கூறப்படுகிறது.

மேலும், தனக்கு தியானம் செய்யவும், யோகா பயிற்சி மேற்கொள்ளவும் சிறை வளாகத்தில் தனி இடம் வேண்டும் என்று சசிகலா கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தங்கி இருக்கும் அறைக்கு அருகிலேயே தியானம் மற்றும் யோகா பயிற்சி மேற்கொள்ளலாம் என்று சிறை நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.