பெங்களூர் சிறைக்கு நேற்று மாலை 5.45 மணிக்கு சென்ற சசிகலாவிடம் கையெழுத்துப் பெறப் பட்டு ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டது.பிறகு அவர் ஒரு சிறிய அறைக்கு  அழைத்துச் செல்லப்பட்டார். 10 அடி அகலம், 12 அடி நீளம் கொண்டதாக அந்த அறை  இருந்தது.

அந்த அறையில் கழிவறை  உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை. எனவே சசிகலா வேறு அறை கேட்டுள்ளார்.

நெடுதூரம் பயணம் செய்ததால் சசிகலா சிறையில் மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளார். அவரது ரத்த அழுத்தம் சிறிது அதிகரித்துள்ளது. நேற்று (15.02.17) இரவு சிறையில் சாதம் மற்றும் சாம்பார் சாப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடன் கொண்டு வந்த பழங்களை சாப்பிட்டு இருக்கிறார். அதன் பின்னர் மாத்திரைகளையும், ஆயுர்வேதிக் டானிக்கையும் குடித்தார். நீதிமன்றம் வழங்கிய பல்வேறு ஆவணங்களில் கையொப்பமிட வேண்டி இருப்பதால் எல்லா ஆவணங்களையும் படித்துப்பார்த்து கையொப்பமிடுகிறார். என்று பரப்பன அக்ரஹாரா சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சசிகலா பக்கத்து அறையில் ‘சயனைடு’ மல்லிகா என்ற கைதி  உள்ளார். இந்த சயனைடு மல்லிகா கர்நாடகாவில் உள்ள பெண் கிரிமினல்களில் முக்கியமானவர். வர் கொலை வழக்கில் சிக்கி நீண்ட நாட்களாக பெங்களூர் சிறையில் இருந்து வருகிறார். கடந்த தடவை சசிகலா ஜெயிலுக்கு சென்றபோதும் சயனைடு மல்லிகா அங்குதான் இருந் தார்.

அப்போது ஜெயலலிதாவை சந்தித்து பேசுவதற்கு சயனைடு மல்லிகா மிகவும் ஆசைப்பட்டார்.சிறைத் துறை அதிகாரிகளிடம் இதற்காக அவர் அனுமதி கேட்டார். ஆனால் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.