முதல்வர் பதவியை அடைந்தே தீருவேன் என்கிற பேராசை நிறைவேறாத நிலையில் செங்கோட்டையன் அல்லது தம்பிதுரைக்கு அந்த வாய்ப்பு தரக் கூடும் என கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் சசிகலாவுக்கு உக்கிரமான எதிர்ப்பு நிலவுகிறது. அதிமுகவே இரண்டாக பிளவுபட்டுள்ளது. முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான சசிகலா எதிர்ப்பு அணி விஸ்வரூபமெடுத்துள்ளது.

ஆளுநர் தரப்பிலும் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கை காரணம் காட்டி பதவியேற்க அழைக்காமல் இருக்கிறது. இது சசிகலா தரப்பை மிகக் கடுமையாக அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதனால் தமக்கு பதிலாக செங்கோட்டையன் அல்லது தம்பிதுரையை தற்காலிகமாக முதல்வராக்கி பின்னர் சமயம் வரும்போது முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்துவிடலாம் என சசிகலா திட்டமிட்டு வருகிறாராம்.
ஆளுநர் இன்று சந்திக்க நேரம் கொடுத்தால் இந்த யோசனையை சசிகலா தெரிவிக்க வாய்ப்புள்ளது என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.