சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு விரைவில் வர இருந்ததால் அவரை ஆட்சி அமைக்க அழைப்பதில் கவர்னருக்கு தயக்கம் இருந்தது. சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று காலை சசிகலா குற்றவாளி என தீர்ப்பு வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் வழ்ங்கிய 4 வருட ஜெயில் தண்டனையை உறுதி செய்தது.

இந்த தீர்ப்பு குறித்து அரசியல் கட்சியினரும் பல்வேறு திரை உலக பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகை கவுதமி ஜெயலலிதாவின் மறைவுக்கும் சசிகலா பதில் சொல்ல வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிலிருந்தே தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார் கவுதமி. தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து, “சசிகலா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார். அவர் ‘அம்மாவின்’ மறைவுக்கும் பதில் சொல்ல வேண்டும்.

இரண்டு வழக்குகளுக்கும் சரிசமமான தீர்ப்பு சரியாகாது.. அம்மாவுக்கான நியாயம் வேண்டும்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கவுதமி.