சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, தமிழக சிறைக்கு மாற்றுவது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

வழக்கறிஞர்கள், மூர்த்திராவ், செந்தில், அசோக் ஆகிய மூவரும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து, சசிகலாவுடன் சிறையில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஆலோசனையின் போது, சசிகலாவை, பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து தமிழக சிறைக்கு இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும், அமைச்சர்களும் பதவியேற்ற தகவலை அறிந்த சசிகலா புன்னகைத்துள்ளார்.

முதல்வரும், அமைச்சர்களும் பெரும்பான்மையை நிரூபித்த பிறகு தன்னை சந்திக்க பெங்களூரு வந்தால் போதும் என்று அவர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.