பொதுமக்கள் அஞ்சலிக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நேற்று சென்னை ராஜாஜி அரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி, பிரதமர், பிரபல நடிகர், நடிகைகள் என பலர் அஞ்சலி செலுத்தவந்தபோதும் பெரிதான ரியாக்‌ஷன்கள் ஏதும் இன்றி அமைதியாகவே இருந்தார் சசிகலா. பெரும்பாலும் பேசுவதையே தவிர்த்தார். ஆனால் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த தன்னுடைய உறவினருக்கு ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்களை தன்னை மறந்து சைகையுடன் விவரித்தார் சசிகலா. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.