சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த், தன், ‘பேஸ்புக்’ பக்கத்தில், ஜெயலலிதாவும் சசிகலாவும் பேசும் வீடியோ பதிவு இருப்பதாகவும்,

அது, சசிகலா மீதுள்ள களங்கத்தை துடைக்கும் என்றும் கூறியிருந்தார்.

இதன் பின்னணி குறித்து, சசிகலா ஆதரவு தரப்பினர் கூறியதாவது,

ஜெயலலிதாவுக்காக, தன் வாழ்க்கையை அர்ப் பணித்தவர் சசிகலா.

அவர் மீது இப்படி அபாண்ட மாக பழி விழுந்துள்ளது வருத்தம் தருகிறது.

அதிகம் படித்தவை:  நரைத்த தலையுடன் ஆவேசமான ஜெயலலிதாவின் வீடியோ.....எந்த நிமிடமும் ரிலீஸ்?

ஜெ., சிகிச்சை பெற்ற போது, அவரை சசிகலா எவ்வளவு கவனமாக பார்த்துக் கொண்டார் என்பதும்,

அவர்கள் இருவரிடம் இருந்த பாசமிக்க உறவும், அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவை பார்த்தால், உலகுக்கு புரியும்.

அந்த வீடியோ, என்றேனும் ஒரு நாள் வெளியாகும். ஆனால், அதை வெளியிடக் கூடாது என, சசிகலா கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  கோடநாடு:டிரைவர் விபத்தில் மரணம்; மற்றொருவர் கவலைக்கிடம்

ஒரு பெண்ணை, அந்த உடையில், வெளியுலகம் பார்க்கக் கூடாது என்பதற்காகவும், அதை வெளியிடக் கூடாது என, சசிகலாகூறியுள்ளார்.

சிறைக்கு செல்வதற்கு முன் கூட, ‘அது வெளியானால் தற்கொலை செய்து கொள்வேன்’ என, திட்ட வட்டமாக கூறிச் சென்றார்.

இவ்வாறு தெரிவித்தனர்.