தமிழக முதல் அமைச்சராக சசிகலா பதவியேற்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த சுப்ரமணியன் சுவாமி கூறியதாவது. “ தற்போதைய சூழல் தெளிவாக உள்ளது. தமிழக முதல் அமைச்சராக சசிகலா பதவியேற்க வேண்டும். தாமதமானால் சட்டத்திற்கு புறம்பாகிவிடும். இந்த பிரச்சினையில் ஜனாதிபதி தலையிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.