Politics | அரசியல்
கட்டுக்கட்டாக சிக்கிய பணம்.. சசிகலாவுக்கு வந்த சிக்கல்.. அடுத்தடுத்து பரபரப்பு
அம்மையார் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எப்படியாவது முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த சசிகலாவிற்கு ஊழல் வழக்கு தொடர்பாக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது நீதிமன்றம். இதனால் தற்போது பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால் சிறையில் இருந்தாலும் தமிழக அரசியல் அவரைச் சுற்றி மட்டுமே நடக்கும் படி பார்த்துக் கொண்டார். எந்த ஒரு முக்கிய முடிவும் சசிகலாவின் உத்தரவின்றி வெளியே வருவதில்லை. தற்போது வருமானவரித் துறையினர் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத சுமார் 1600 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
எப்படி இவ்வளவு பணத்தை யாருக்கும் தெரியாமல் நிர்வாகித்து வந்திருக்க முடியும் என அலசிய போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. சசிகலாவின் உறவினர் மற்றும் அவரது வேலைக்காரர்களின் பெயரில் கோடிக்கணக்கில் டெபாசிட் செய்து வைத்துள்ளனர்.
இதில் கொடுமை என்னவென்றால் இவ்வளவு பணங்கள் இருப்பது அந்த வேலைக்காரர்களுக்கு தெரியாது. இதனால் சசிகலாவை சிறையை விட்டு வெளியே வரமுடியாதபடி செய்ய தொடர்ந்து வழக்குகளை அடுக்கிக் கொண்டே போகின்றனர். உங்களுக்குத் தெரியாமல் எப்படி இவ்வளவு பணம் வந்தது எனக் கேட்டபோது ஏதோ இன்சூரன்ஸ் போட வேண்டும் என கையெழுத்து வாங்கியதாக அவர்கள் தெரிவித்தனர்.
இது தெரியாமல் மாதச் சம்பளத்திற்கு அடிமையாய் வேலை பார்த்துள்ளனர் அந்த ஏழைகள்.!
