தமிழ் சினிமாவில் மனோரமாவிற்கு பிறகு காமெடியில் பெண்கள் கலக்க முடியும் என்பதற்கு கோவை சரளாவே ஓர் உதாரணம். இவர் கமல்ஹாசனுக்கே ஜோடியாக நடித்தவர்.

இந்நிலையில் அடுத்து இவர் கதையின் நாயகியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தை பாலாவின் உதவி இயக்குனர் பிரகாஷ் இயக்குகிறார்.

ஹீரோ யார் தெரியுமா? சசிகுமார் தான், கிடாரியை தொடர்ந்து படம் இயக்குவார் என்று எதிர்ப்பார்த்தால் மீண்டும் ஹீரோவாகவே களம் இறங்கிவிட்டார்.

மேலும், இந்த படமும் கிராமத்து கதையம்சம் கொண்டு கதை தானாம், இப்படத்திற்கும் கிடாரி இசையமைப்பாளர் தர்புகா சிவாவே இசையமைக்கவுள்ளார்.

ஆனால், படத்தில் கோவை சரளாவிற்கும், சசிகுமாருக்கும் என்ன உறவு என்பது தான் சஸ்பென்ஸ் நீடிக்கின்றது.