அப்போலோ மருத்துவமனையில் நடந்த சசிகலா-ஜெயலலிதா உரையாடல் தொடர்பான வீடியோ தன்னிடம் இருப்பதாக திவாகரன் மகன் ஜெயானந்தன் கூறியது உண்மை தான் என்று சுகாதாரத்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் சசிகலா பேசும் வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் அந்த வீடியோவை வெளியிடுவேன் எனவும் சில தினங்களுக்கு முன்பு திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் . இந்த தகவல் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகம் படித்தவை:  ஓ.பி.எஸ். மக்களை ஏமாற்றிக் கொண்டு இன்னும் சசிகலாவுடன் தான் இருக்கிறாராம்: திடுக் தகவல்.!

இந்த நிலையில் ஜெயானந்திடம் அந்த வீடியோ இருப்பது உண்மை தான் என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. “ஆளுநர் உள்பட யாரையும் ஜெயலலிதாவை சந்திக்க ஏன் அனுமதிக்கவில்லை என்ற கேள்வி எழுந்தபோது, சுகாதாரத்துறையின் உயர் அதிகாரி ஒருவர், சசிகலாவிடம் பேசினார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக நாளை வேறு விதமான சிக்கல்களும் நமக்கு வரலாம். அதனால், நம்முடைய பாதுகாப்புக்காக வீடியோ ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ளலாம். நீங்கள் எப்போதும் போல அவருடன் பேசுங்கள்.” என கூறியிருக்கிறார். ஆனால் சசிகலா முதலில் இதற்கு மறுப்பு தெரிவிக்க, பின்னர் அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியும் சசிகலாவை சமாதானப்படுத்தியுள்ளார்.

அதிகம் படித்தவை:  30 ஆண்டுகள் காத்திருந்து முதுகில் குத்திய சசிகலா…3 மாதத்தில் மார்பில் குத்தி சாதித்த எடப்பாடி : கதறு

பிறகு ஒரு வழியாக சசிகலா சம்மதம் தெரிவிக்க, பத்து நிமிடத்திற்கு இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ பாதுகாப்பிற்காக சசிகலா குடும்பத்தினர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்ற சர்ச்சை கிளம்பிய போது, எந்த விசாரணைக்கும் நான் தயார் என தைரியமாக சசிகலா கூறினார்.” என சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.