Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆர்யாவுக்கு பதிலாக சர்வம் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் இவர்தான்.. இந்த டாப் ஹீரோவா?
தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகராக வலம் வருபவர் ஆர்யா. எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் அசால்ட்டாக நடித்து கொடுத்து விடுவார்.
அப்படிப்பட்ட ஆர்யாவுக்கு நீண்டகாலமாக ஒரு பெரிய வெற்றிப்படம் அமையாமல் தடுமாறி வருகிறார். ஆர்யா நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் என்றால் அது சர்வம் தான்.
யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி இருந்த அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றதால் என்றால் கேள்விக்குறிதான்.
முதன் முதலில் சர்வம் படத்தில் நடிக்க இருந்தவர் சூர்யா தானாம். அதேபோல் நடிகையாகவும் இலியானா நடிக்க இருந்தாராம்.
ஒருவேளை இந்த படத்தில் சூர்யா நடித்த இருந்தால் சர்வம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியிருக்கும் என்கிறார்கள் சினிமா வாசிகள்.

suriya-40-41-42-43
